Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நாம் செல்வச் செழிப்போடு வாழ செய்யக்கூடாதது என்ன....?

நாம் செல்வச் செழிப்போடு வாழ செய்யக்கூடாதது என்ன....?
காலை எழுந்தவுடன் தனது உள்ளங்கைகள், பசு, கோவில் கோபுரம், இறைவனின் திருவுருவப் படம் இவற்றை பார்க்கவேண்டும்.

வீட்டுக்கு  வரும் சுமங்கலிப் பெண்களுக்கு குங்குமமும், தண்ணீரும் வழங்க வேண்டும். அவர்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் பல ஜென்மங்களில்  செய்த பாவங்கள் விலகி பாக்கியங்களும், பொருளும், சந்தோஷமும் பெருகும்.
 
எந்தப் பொருளையும் இல்லை, இல்லை எனக் கூறக்கூடாது. இந்தப் பொருள் வாங்க வேண்டியதிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.  அன்னம், உப்பு, நெய் இவைகளைக் கையால் பரிமாறக்கூடாது. கரண்டியால் மட்டுமே பரிமாறவேண்டும். கையால் பரிமாறப்பட்ட அன்னம்,  உப்பு, நெய் இவை கோ மாமிசத்துக்கு சமம்.
 
அமாவாசையன்று எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது. இரவில் வீட்டைப் பெருக்கினால் குப்பையை வெளியே கொட்டக்கூடாது. பணம், நாணயம் உள்ளிட்டவைகளை கண்ட கண்ட இடத்தில் வைக்கக்கூடாது. ஆண்கள் பணம் வைக்கும் பர்ஸை, ஏ.டி.எம். கார்டுகளை பின்புறத்தில்  வைத்துக்கொள்ளாது, சட்டையின் உள் பாக்கெட்டில் வைத்துக்கொள்ள வேண்டும்.
 
செல்வச் செழிப்போடு வாழ நாம் வாழும் வீட்டில் துர்நாற்றம் வீசக்கூடாது. அப்படி வீசினால், பண வரவு குறைந்து கொண்டே இருக்கும். செல்வச் செழிப்போடு வாழ, நமது வீட்டில் நமது ஆடைகள், துணிகள் சிதறிக் கிடக்கக்கூடாது. நாம் பயன்படுத்திய ஆடைகளை ஒரு தனி  பெட்டியிலும், புதிய ஆடைகளை இன்னொரு பெட்டியிலும் போட்டு வைப்பது அவசியம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நீ எதை விதைகிறாயோ அதையே அறுப்பாய் - இயேசு கிறிஸ்து