Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காலில் தங்கம் அணியாததன் ரகசியம் என்ன தெரியுமா...?

காலில் தங்கம் அணியாததன் ரகசியம் என்ன தெரியுமா...?
மகாலட்சுமி மிகவும் விரும்பி தங்கும் இடங்களில் தங்கமும் ஒன்று. எனவேதான் பெண்கள் கண்டிப்பாக ஏதாவது ஒரு தங்க ஆபரணம் அணிந்திருக்க வேண்டும் என்கிறார்கள். தங்க ஆபரணங்கள் உடலுக்கு ஒரு புனிதத் தன்மையை தருவதாக சான்றோர்கள் சொல்லி உள்ளனர்.
தங்கத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிற காரணத்தால் அதை ஆபரணங்களாக கால்களில் அணியக் கூடாது. கொலுசு, மெட்டி போன்றவற்றை வெள்ளியில்தான் அணிய வேண்டும். இடுப்பில் தங்க ஆபரணங்கள் அணியலாம். தங்க ஆபரணங்கள் அணிவது அழகுக்காக என்றே  பெரும்பாலானவர்கள் கருதுகிறார்கள்.
 
தங்க நகைகளை அணிவதால் நமக்கு எத்தகைய பலன்கள் கிடைக்கும் என்பதை சங்க கால நூல்கள் அழகாக கூறியுள்ளன. தங்க நகை அணிந்தால் நம் மனதில் தெளிவும் உறுதியும் இருக்கும். இயற்கையாகவே தங்கத்துக்கு உறுதித் தன்மை அதிகம். அது நம் உடலோடு ஓட்டி  கிடப்பதால் நமக்கு மனபலம் உண்டாகும்.
 
தங்கமானது தன்னம்பிக்கை உணர்வைத் தரும் சக்தி கொண்டது. நீங்கள் தங்க மோதிரம் அல்லது தங்க சங்கிலி அணிபவராக இருந்தால்  நிச்சயமாக சில விஷயங்களில் உங்களுக்கு தன்னம்பிக்கை கிடைக்கும். இதை கருத்தில் கொண்டே நம் முன்னோர்கள் தாலியை தங்கத்தில்  செய்யும் மரபை உண்டாக்கினார்கள். தங்கத்துக்கு தெய்வீகத்தன்மை உள்ளது.
 
தங்கத்தை லஷ்மியை போன்று பார்க்கும் காரணத்தால் தான் தங்கத்தை காலில் அணிவதற்கு அன்றைய காலத்து மக்கள் விரும்பவில்லை.  மேலும் தங்கத்தை காலில் அணிந்தால் செல்வம் குறைந்துவிடும் என கூறப்படுகிறது.
webdunia
தங்கத்தை நம் உடலில் ஒவ்வொரு பகுதியிலும் வைக்கும் போது உடல் சில தன்மைகளை பெறுகிறது. காதில் தங்கம் இருந்தால் கழுத்து  நரம்பு வலுவாக இருக்கும். மோதிர விரலில் தங்கம் இருந்தால் கருப்பையும், விந்துவும் வலுவடையும்.
 
ஆனால், காலில் தங்கம் இருந்தால் வாத நரம்புகள் தூண்டிவிடப்பட்டு உடலில் வீக்கமும் வலியும் ஏற்படுகிது என மருத்துவ சாஸ்திரம்  கூறுகிறது. அதனால் தான் நம் முன்னோர்கள் வாதத்தை கட்டுப்படுத்தி சமமாக வைக்கும் வெள்ளியை காலில் அணிந்து வந்தார்கள். இதுவே,  காலில் தங்கம் அணியாததன் ரகசியம் ஆகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எந்த கிழமைகளில் ருதுவானால் என்ன பலன்கள்...!