தமிழ்நாட்டிற்கு இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என்பதால் மஞ்சள் நிற எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
தமிழகம் முழுவதும் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மிகுந்த அவதி அடைந்து வருகின்றனர். கோடை காலம் தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி விட்டதால் பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழ்நாட்டிற்கு இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கையை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். அதன்படி, மே 2ம் தேதி வரை வெப்ப அலை வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று அதிகபட்சமாக ஈரோட்டில் 108.32 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் மிகக் கடுமையான வெப்ப அலை வீசும் என்பதால் சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.