Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அந்த பிரியாணி வீடியோ உண்மைதான்.. ஆனால்? - சிறை அதிகாரிகள் விளக்கம்

அந்த பிரியாணி வீடியோ உண்மைதான்.. ஆனால்? - சிறை அதிகாரிகள் விளக்கம்
, சனி, 6 அக்டோபர் 2018 (11:16 IST)
பழல் சிறையில் கைதிகள் பிரியாணி சமைப்பது போல வெளியான வீடியோ குறித்து சிறைத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

 
சிறைகளில் அவ்வப்போது நடத்தப்படும் சோதனைகளில் பீடி, சிகரெட், கைதிகள் ஒளித்து வைத்திருக்கும் பணம் என மாட்டுவது வாடிக்கை. ஆனால் கடந்த மாதத்தில் சென்னைப் புழல் சிறையில் கைதிகள் சொகுசாக வாழ்வது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின.
 
சமீபத்தில் சென்னை புழல் சிறையில் சகல வசதிகளுடன் சிறைக் கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழும் புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, புழல் சிறையில் டிஐஜி முருகேசன் தலைமையிலான போலீஸார்  நடத்திய சோதனையில் பாஸ்மதி அரிசி, எல்சிடி தொலைக்காட்சிகள், மெத்தைகள் மற்றும் கட்டில்கள் போன்ற சொகுசுப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. இந்தப் பொருட்களை எவ்வாறு சிறைக்குள் கொண்டு சென்றிருப்பார்கள் என்ற கோணத்திலும் விசாரனை நடந்துவருகிறது.
 
அதேபோல், சிறையில் தண்டனைக் கைதிகள் பிரியாணி சமைக்கும் வீடியோ ஒன்று வெளியாகி மேலும் பரபரப்பைக் கூட்டியுள்ளது. 
 
இந்நிலையில், இதுபற்றி விளக்கம் அளித்துள்ள சிறை அதிகாரிகள், கைதிகள் பிரியாணி தயாரிக்கும் வீடியோ தற்போது எடுக்கப்பட்டதல்ல. அது ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட வீடியோ. ரம்ஜான் பண்டிகை சமயத்தில் சிறைத்துறை விதியின்படி முஸ்லீம் கைதிகளுக்காக பிரியாணி தயாரிக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோ ஆகும். அதை யாரோ, சிறைத்துறை நிர்வாகத்தின் பெயரை களங்கப்படுத்தும் நோக்கத்தில் அதை தற்போது சிலர் வெளியிட்டுள்ளனர் என அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தீவிரவாதத்தை முற்றிலும் முறியடிப்போம் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்