ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய போராட்டக்காரர்கள் மீது சமீபத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவம் தமிழகம் முழுவதிலும் பெரும் அதிர்வலைகளை ஏறப்டுத்திய நிலையில் இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு இரண்டு துணை வட்டாட்சியர்கள் கொடுத்த உத்தரவே காரணம் என்பது இந்த வழக்கின் எப்.ஐ.ஆரில் இருந்து தெரிய வந்துள்ளது
இந்த நிலையில் இந்த வழக்கு தமிழக காவல்துறையினர் சம்பந்தப்பட்ட வழக்கு என்பதால் இந்த வழக்கை சிபிசிஐடி அல்லது சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வந்தனார்.
இந்த நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்தது தமிழக அரசு! இதுவரை தூத்துக்குடி போலீசார் இந்தத வழக்கை விசாரணை செய்து வந்த நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார். சிபிசிஐடி அதிகாரிகளின் விசாரணைக்கு பின்னரே இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.