Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அரவக்குறிச்சி தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளர் தம்பித்துரை ?

அரவக்குறிச்சி தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளர் தம்பித்துரை ?

அரவக்குறிச்சி தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளர் தம்பித்துரை ?
, வெள்ளி, 14 அக்டோபர் 2016 (14:10 IST)
தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலை இந்திய தேர்தல் ஆணையமே நிறுத்தியது. மேலும், திருப்பரங்குன்றம் அ.தி.மு.க எம்.எல்.ஏ உடல் நிலை சரியில்லாமல் உயிரிழந்தார். ஆகவே மூன்று சட்டமன்ற தொகுதிக்கும் ஒரே நாளில் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் தீர்மானித்துள்ளது.


 

 
இந்நிலையில் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி வேட்பாளராக  முன்னாள் செந்தில் பாலாஜி அறிவிக்கப்பட்டிருந்தார். ஆனால் அது அ.தி.மு.க வின் கொள்கை பரப்பு செயலாளரும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பித்துரைக்கு பிடிக்கவில்லை. 
 
ஆகவே, அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியின் மேல் தம்பித்துரையின் பார்வை பட, இந்திய தேர்தல் ஆணையர் டாக்டர் சையது நாசிம் அகமது சைதிக்கே மறைமுகமாகவும், நேரிடையாகவும் மனுக்களையும், புகார்களையும் தெரிவித்து தேர்தலை நிறுத்தினார். 

webdunia

 

 
ஆனால் தேர்தல் ஆணையமோ ஒரு தொகுதிக்கு மட்டும் தேர்தலை நிறுத்தினால் தேர்தல் ஆணையத்தின் மேல் பொதுமக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை இழப்பார்கள் என்று கருதி, அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய இரு தொகுதிகளுக்கும் தேர்தலை நிறுத்தியது. துரதிஸ்திடவசமாக திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏவும் உயிரிழந்ததையடுத்து, மூன்று தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தலை வரும் நவம்பருக்குள் நடத்தி முடிக்க ஆலோசனை நடத்தப்பட்டது. 
 
இந்நிலையில் அடுத்த வாரம் தமிழகத்தின் மூன்று தொகுதிகளுக்கும் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் கூறியதையடுத்து அ.தி.மு.கவினர் தேர்தல் வேளையை களமிறங்கினர். ஆனால், திடீர் குண்டு போட்டது போல், தம்பித்துரைதான் அரவக்குறிச்சி தொகுதியின் வேட்பாளர் என்றும், ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள் அடிக்க தம்பித்துரை நூதனமாக சென்னை அப்போலோவிலிருந்து சதி திட்டம் தீட்டி வருகின்றார். 
 
செந்தில் பாலாஜியை தம்பித்துரைக்கு பிடிக்கவில்லை, மேலும் தற்போது உள்ள மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை, தனது பதவிக்காலம் முடிவடைய உள்ளதையடுத்து, அடுத்த முறை பாராளுமன்ற உறுப்பினராக நிற்க முடியாது. 
 
ஏனென்றால் கரூர், திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிக்கு சென்று பொதுமக்களிடம் வாக்குகள் சேகரிக்க வேண்டும்.  சென்ற முறை செந்தில் பாலாஜி இருந்தார். ஆனால் தற்போது மாவட்ட செயலாளரும்., தமிழக போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் துணையுடன் வெற்றி பெற வேண்டிய சூழ்நிலையில் உள்ளார்.
 
இதன் மூலம், ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் திட்டத்தில் தனது அரசியல் விரோதியாக கருதப்படும் செந்தில் பாலாஜிக்கு பதில் அவரே நின்று  அந்த தொகுதியின் முழு பொறுப்பையும், எம்.ஆர்.விஜயபாஸ்கரை கொண்டு வெற்றி பெறுவது ஒரு மாங்காய், மற்றொன்று, எம்.எல்.ஏ ஆகி விட்டால் முதல்வர் சீட்டில் உட்காரலாம் என்று கணக்கு போடுவதாக தகவல்கள் வெளியாகின்றன. 
 
இதில் யோசிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் தமிழக அளவில் மக்களவை துணை சபாநாயகராக இருக்கும் தம்பித்துரை, அரவக்குறிச்சி தொகுதி மக்களிடம் மட்டும் குறைகளை கேட்டறிந்து அங்கிருந்து வெளியேறியது போல், சென்னை அப்போலோ மருத்துவமனையில் யாரையும் சந்திக்க விடாமல் செய்து கதவருகே அங்குமிங்குமாக சுற்றி வருவதாக தகவல்கள் இந்த வாய்ப்புக்காகத்தான் என்பதை தெள்ளத்தெளிவாக காட்டுகின்றது. 
 
ஆக அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ வாக ஆகி விட்டால் செந்தில் பாலாஜியை பழிவாங்கி விடுவதோடு, தான் எதிர்பார்த்த முதல்வர் சீட்டை பிடிக்கவும் வாய்ப்புள்ளது என கருதுகிறாராம். ஆகவே அரவக்குறிச்சி சட்டசபை தொகுதியில் போட்டியிட தம்பிதுரைக்குதான் வாய்ப்புள்ளதாக அதிமுக வினரிடையே பரவலான பேச்சு நிலவுகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆம்புலன்ஸில் ஆக்சிஜன் இல்லாமல் நோயாளி மரணம்