Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நீதிமன்ற தடை மீறி டெல்லியில் நடந்த சசிகலா புஷ்பா திருமணம்..

நீதிமன்ற தடை மீறி டெல்லியில் நடந்த சசிகலா புஷ்பா திருமணம்..
, திங்கள், 26 மார்ச் 2018 (11:40 IST)
நீதிமன்றம் தடை விதித்த பின்னும் அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பாவின் திருமணம் டெல்லியில் நடந்து முடிந்துள்ளது.

 
சசிகலாவும், ஜெயலலிதாவும் தன்னை அடித்து விட்டதாக பாராளுமன்றத்தில் புகார் பரபரப்பை ஏற்படுத்தியவர்  அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பா. அதனால், அவர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பின், சசிகலாவிற்கு எதிரான கருத்துகளை அவர் தெரிவித்து வந்தார். மேலும், அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு அவரின் பெயரில் விருப்ப மனு கொடுக்க வந்த அவரின் கணவரை அதிமுகவின் கடுமையாக தாக்கினர். 
 
அந்நிலையில், வழக்கறிஞர் ராமசாமி என்பவரை  வருகிற  26-ம் தேதி சசிகலா புஷ்பா  மணக்கப்போவதாக சமூகவலைத்தளங்கலில் அழைப்பிதழ் பரவியது.  ராமசாமி ஓரியண்டல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எனவும் செய்திகள் வெளியானது. மேலும் அவர் நாடாளுமன்றத்தின் சட்ட ஆலோசகராக உள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஆனால், இது தொடர்பாக சசிகலா புஷ்பா இதுவரை எந்த விளக்கும் அளிக்கவில்லை.
webdunia


 
அந்நிலையில், ராமசாமியின் முதல் மனைவி சத்யபிரியா இது தொடர்பாக மதுரை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதனை விசாரித்த நீதிமன்றம் சசிகலாவின் திருமணத்திற்கு தடை விதித்து இன்று தீர்ப்பளித்துள்ளது. 
 
எனவே, அவரின் திருமணம் நடைபெறுமா என்கிற சந்தேகம் எழுந்தது. ஆனால், திட்டமிட்டபடி அவர்களின் திருமணம் டெல்லியில் இன்று காலை நடந்து முடிந்துள்ளது. 
 
சசிகலா புஷ்பாவும், அவரின் முதல் கணவர் லிங்கேஸ்வரனும் விவகாரத்து செய்வதாய் டெல்லியில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் ஏற்கனவே மனு கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தோனேசியாவில் பயங்கர நிலநிடுக்கம்- ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவு