Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காவிரியில் தண்ணீர் வர ராஜராஜ சோழன் சிலை காரணமா?

காவிரியில் தண்ணீர் வர ராஜராஜ சோழன் சிலை காரணமா?
, திங்கள், 23 ஜூலை 2018 (19:00 IST)
காவிரியில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. 85 ஆண்டுகால மேட்டூர் அணை வரலாற்றில் 39வது முறையாக தனது முழு கொள்ளளவை அடைந்துள்ளது. இன்று இந்த அணையில் இருந்து வினாடிக்கு 50ஆயிரம் கன அடி திறந்துவிடப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடைமடைக்கும் இந்த தண்ணீர் செல்லும் என்பதே விவசாயிகளின் கணிப்பாக உள்ளது.
 
இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் குஜராத்தில் இருந்து ராஜராஜ சோழன் சிலையை சிலை மீட்புத்துறை அதிகாரியான பொன்.மாணிக்கவேல் மீட்டு தஞ்சை கொண்டு வந்தார். ராஜராஜசோழன் சிலை தஞ்சைக்கு வந்தபின்னரே தஞ்சை உள்பட டெல்டா மாவட்டங்களுக்கு நல்ல காலம் பிறந்துவிட்டதாகவும், அந்த சிலையில் வருகையால்தான் மேட்டூர் அணை நிரம்பியுள்ளதாகவும் அந்த பகுதி மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
 
webdunia
மேலும் இனிமேல் தஞ்சை உள்பட தமிழக விவசாயிகளுக்கு துன்பம் என்பதே இருக்காது என்றும், ராஜராஜ சோழனின் காலத்தில் எப்படி நாடு செழிப்பாக இருந்ததோ, அதேபோல் அவருடைய சிலை வந்த நேரம் இனிமேல் தமிழகத்திற்கு செழிப்புதான் என்றும் கூறப்பட்டு வருகின்றது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

11 பேர் தற்கொலை : குடும்பத்தில் மிஞ்சிய நாயும் மாரடைப்பில் மரணம்