அரசு தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கப்படும் என்ற சலுகை அறிவிப்பை தேர்வு துறை வெளியிட்டுள்ளது. தற்போது பொது தேர்வு நடைபெற்று வரும் நிலையில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் சரியான நேரத்துக்கு தேர்வு மையத்திற்கு வந்து தேர்வு எழுத சிரமப்படுகிறார்கள் என்றும் அதுமட்டுமின்றி மிகவும் மெதுவாகவே அவர்களால் தேர்வு எழுத முடியும் என்பதால் அவர்களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டது.
இந்த நிலையில் பொது தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் தகுந்த மருத்துவ சான்றிதழையை காண்பித்தால் அவர்களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்க மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அரசு தேர்வு துறை உத்தரவிட்டுள்ளது. எனவே மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகள் இந்த சலுகையை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளனர்.
மாற்றுத்திறனாளி மாணவ மாணவியர்களுக்கு அரசு பொது தேர்வில் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதை அடுத்து அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.