Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் உறுதி

நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் உறுதி

sinoj

, செவ்வாய், 26 மார்ச் 2024 (22:44 IST)
18 வது மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை  7 கட்டங்களாக நடைபெறுவதாகவும் மக்களவை தேர்தலோடு 4 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறும் என்று  தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார்  அறிவித்தார்.
 
அதன்படி தேர்தல் விதிகள்  நாடுமுழுவதும் அமல்படுத்தப்பட்டது. 
 
இந்த நிலையில் பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக, நாம் தமிழர்  உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தலுக்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
இந்த நிலையில்,  கடந்த 2019 மற்று 2021 ஆகிய தேர்தல்களில் நாம் தமிழர் கட்சியின் வசமிருந்த கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் வேறு கட்சிக்கு ஒதுக்கியது. 
 
நாம் தமிழர் கட்சிக்கு வேறு சின்னம் ஒதுக்கப்பட்டது. இது அன்றாடம் பயன்படுத்தும்  மைக் போல் இல்லாமல் வேறுவடிவத்தில் உள்ளதால் இதை வாக்குப்பெட்டியில் மக்களால் அடையாளம் காண முடியுமா? என அக்ட்சியினர் மத்தியில் கேள்வி எழுந்தது.
 
இந்த நிலையில் ஆட்டோ அல்லது தீப்பெட்டி சின்னத்தை  நாம் தமிழர் பெறலாம் என கூறப்பட்ட நிலையில்,  வேறு சின்னம் வேண்டும் என நாம் தமிழர் கட்சி கோரிக்கை விடுத்தது.
 
இந்த நிலையில் மக்கலவை தேர்தலில் மைக் சின்னத்திற்கு பதில் எவெறு சின்னம் ஒதுக்க வேண்டும்  என இந்திய தேர்தல் ஆணையத்திடம் நாம் தமிழர் கட்சி கோரிக்கை வைத்தது.
 
இந்த நிலையில்,   நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பார் சீமானின் கோரிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் நிராகரித்தது.இதனால்  நாம் தமிழர் கட்சி தேர்தல் ஆணையம் ஒதுக்கிய சின்னத்திலேயே போட்டியிட வேண்டிய  நிலையில் உள்ளது.
 
மைக் சின்னத்திற்குப் பதிலாக படகு அல்லது தீப்பெட்டி சின்னத்தை ஒதுக்க வேண்டும் என சீமான் முறையிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 
 
 
சமீபத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும்  40 தொகுதிகளுக்கான  வேட்பாளர்களை ஒரே தொகுதியில் சீமான் அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குறைந்த விலையில் ஐபோன் விற்பனை..! வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்..!!