பேரவையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா உருவ படம் வைக்கப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் தனது கருத்தை தெரிவித்துள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு பேரவையில் கடந்த 12ஆம் தேதி திறக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது, வழக்கை விசாரித்த நீதிபதி தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-
பேரவையில் ஜெ. படம் வேண்டாம் என மக்கள் நினைத்தால் அதன் முடிவு தேர்தலில் எதிரொலிக்கும். தற்போதைய சபாநாயகரின் அதிகார வரம்பிற்குள் நீதிமன்றம் தலையிட முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜெ.படம் அகற்றக்கோரிய அனைத்து வழக்குகளின் விசாரணை மார்ச் 2ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.