Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

யார், யார் தனித் தொகுதியில் போட்டியிடலாம்?; சாதி சான்றிதழ் அவசியம்

யார், யார் தனித் தொகுதியில் போட்டியிடலாம்?; சாதி சான்றிதழ் அவசியம்
, செவ்வாய், 27 செப்டம்பர் 2016 (18:21 IST)
தமிழகத்தில் அடுத்த மாதம் 17 மற்றும் 19ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப் பதிவுகள் நடைபெற இருக்கிறது.
 

 
திங்கட்கிழமை முதல் (26.09.16) தொடங்கிய உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் அக்டோபர் 3ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை அக்டோபர் 4ஆம் தேதி நடைபெறுவுள்ளது.
 
அக்டோபர் 6ஆம் தேதி வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கு கடைசி நாளாகும். வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 21ஆம் தேதி நடைபெறுகிறது.
 
தனித் தொகுதிகளில் போட்டியிடுபவர்கள், வேட்புமனுவுடன் சாதி சான்றிதழ் இணைக்க வேண்டும். எஸ்சி எஸ்டி பிரிவுக்கு ஒதுக்கப்பட்ட (தனித்) தொகுதிகளில் போட்டியிட மனு தாக்கல் செய்பவர்கள், அத்துடன் சாதி சான்றிதழ் இணைப்பது அவசியம் ஆகும்.
 
கலப்புத் திருமணம், சாதி மறுப்பு திருமணம் செய்துக் கொண்ட  பிறப்பால் எஸ்சி எஸ்டி பிரிவினை சாராதவர்கள் எஸ்சிஎஸ்டி பிரிவுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் போட்டியிட எவ்வித தடையும் இல்லை.
 
ஆனால் மதம் மாறிய, பிறப்பால் எஸ்சி, எஸ்டி பிரிவினை சார்ந்தவர்கள், எஸ்சி, எஸ்டி பிரிவுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் போட்டியிடுவதில் பிரச்சினையுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’அதிர்ச்சி’ - சென்னையில் 1700 மக்கள் துப்பாக்கி வைத்திருக்கிறார்கள்!