Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அழிவில் 42 இந்திய மொழிகள்: அதிர்ச்சி ரிபோர்ட்...

அழிவில் 42 இந்திய மொழிகள்: அதிர்ச்சி ரிபோர்ட்...
, திங்கள், 19 பிப்ரவரி 2018 (22:01 IST)
தமிழகத்தின் 2 வட்டார மொழிகள் உட்பட இந்தியாவின் தொன்மையான 42 மொழிகள் அழிவின் விளிம்பில் உள்ளதாக ரிபோர்ட் ஒன்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இது குறித்த விரிவான தகவல்கள்....
தமிழகத்தின் 2 வட்டார மொழிகள் உட்பட 42 இந்திய மொழிகள் அழிய இருகின்றனவாம். இந்தியாவில் முக்கிய 22 மொழிகள் மட்டுமின்றி 100-க்கும் அதிகமான வட்டார மொழிகளும் பரவலாக பேசப்படுகின்றன. 
 
இந்த மொழிகளை சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் பேசி வருகின்றனர். இந்த 100 மொழிகளில் 42 வட்டார மொழிகளை 10,000-க்கும் குறைவான மக்கள் மட்டும்தான் பேசுகின்றனர். இந்த மொழிகள்தான் அழிவின் விளிம்பில் இருக்கின்றனவாம். 
 
அந்தமான் நிக்கோபர் தீவுகளில் 11 ஆதிகுடிகளின் மொழிகள், மணிப்பூர் பழங்குடிகளின் 7 மொழிகள், ஹிமாச்சலில் 4, ஒடிஷாவில் 3, கர்நாடகாவில் 2, தமிழகத்தில் 2 என இவை இதில் அடங்கும். இந்த வட்டார மொழிகளுக்கு எழுத்து வடிவம் இல்லை. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தினகரனின் குக்கரை தள்ளி வைத்த டெல்லி உயர் நீதிமன்றம்!