Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்னைக்கு மேட்ச்சும் அம்பேல்தானா? மழையால் தொடங்காத போட்டி! – ரத்து செய்யப்பட்டால் என்ன ஆகும்?

Rain Delay

Prasanth Karthick

, வியாழன், 16 மே 2024 (20:23 IST)
இன்று சன்ரைசர்ஸ் ஐதராபாத் – குஜராத் டைட்டன்ஸ் இடையே நடைபெற இருந்த போட்டி மழைக்காரணமாக இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது.



ஐபிஎல் சீசனின் லீக் போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதிக் கொள்கின்றன. குஜராத் அணி ப்ளே ஆப் வாய்ப்பை இழந்த நிலையில் இன்று சன்ரைசர்ஸ் அணி குஜராத்தை வீழ்த்தினால் ப்ளே ஆப்க்கு தகுதி பெற்றுவிடும் என்பதால் இந்த போட்டி பெரிதும் எதிர்பார்க்கபட்டது.

ஆனால் மழை குறுக்கீட்டின் காரணமாக இன்னும் போட்டிகள் தொடங்கப்படாமல் உள்ளது. தாமதமாக தொடங்குவதால் ஓவர்கள் குறைக்கப்பட்டு ஆட்டம் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தொடர்ந்து மழை பெய்து வரும் பட்சத்தில் ஆட்டம் ரத்து செய்யப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் மட்டுமே வழங்கப்படும்.


அப்படி வழங்கப்பட்டால் சன்ரைசர்ஸ் அணி 15 புள்ளிகளுடன் ப்ளே ஆப்க்கு தகுதி பெற்று விடும். கொல்கத்தா, ராஜஸ்தான், சன்ரைசர்ஸ் மூன்று அணிகளும் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டால், சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் போட்டி க்னாக் அவுட் போட்டியாக அமையும் இதில் வெற்றி பெறும் அணி ப்ளே ஆப் செல்ல முடியும். ஒருவேளை அந்த போட்டியும் மழைக்காரணமாக ரத்து செய்யப்பட்டால் சிஎஸ்கே 15 புள்ளிகளுடன் ப்ளே ஆப் செல்லும். ஆர்சிபி 13 புள்ளிகளுடன் வெளியேறும்.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆர்சிபி கனவுக்கு ஆப்பு வைக்குமா மழை? மஞ்சள் படையை எதிர்கொள்ளும் நாளில் ஆரஞ்சு அலெர்ட்!