Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு..! ஓரங்கட்டப்பட்ட தமிழக வீரர்கள்..!!

Indian Team

Senthil Vela

, செவ்வாய், 30 ஏப்ரல் 2024 (16:08 IST)
கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
 
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் 1ம் தேதி தொடங்கி 29ம் தேதி வரையில் நடைபெற உள்ளது. அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் இணைந்து நடத்தும் இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன.  இந்நிலையில், குரூப் ஏ, குரூப் பி, குரூப் சி, குரூப் டி என்று 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் 5 அணிகள் இடம் பெற்று விளையாடுகின்றன.
 
இந்த நிலையில் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி  அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட வீரர்களின் பட்டியலை பிசிசி வெளியிட்டுள்ளது.
 
டி20 தொடருக்கான இந்திய அணி:
 
ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பன்ட் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹல், அர்ஷிதீப் சிங், ஜஸ்பிரீத் பும்ரா, முகமது சிராஜ்
 
மாற்று வீரர்கள் : சுப்மான் கில், கலீல் அகமது, அவேஷ் கான், ரிங்கு சிங் 
 
 
தமிழக வீரர்களுக்கு இடமில்லை;
 
T20 உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பட்டியலில் தமிழக வீரர்கள் யாரும் இடம் பெறவில்லை. தமிழக வீரர்களான சாய் சுதர்சன், நடராஜன் ஆகியோர் அறிவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பட்டியலில் அவர்களின் பெயர்கள் இடம் பெறவில்லை. மேலும் தினேஷ் கார்த்திக், நடராஜன் ஆகியோரின் பெயர்களும் இடம் பெறாதது ரசிகர்களிடையே மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எய்டன் மர்க்ரம் தலைமையில் தயாரானது தென்னாப்பிரிக்க அணி! – உலகக்கோப்பை டி20 அணி விவரம்!