Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஐ.பி.எல் vs உலகக்கோப்பை –வீரர்களை வாட்டி வதைக்கும் இந்திய கிரிக்கெட் வாரியம்

ஐ.பி.எல் vs உலகக்கோப்பை –வீரர்களை வாட்டி வதைக்கும் இந்திய கிரிக்கெட் வாரியம்
, செவ்வாய், 13 நவம்பர் 2018 (08:42 IST)
அடுத்த ஆண்டு குறுகிய கால இடைவெளியில் ஐபிஎல் மற்றும் உலகக்கோப்பை நடைபெற இருப்பதால் கிரிக்கெட் வீரர்கள் உலகக்கோப்பையை முன்னிட்டு ஐபிஎல் போட்டிகளைப் புறக்கணிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

ஐபிஎல் என அழைக்கப்படும் இந்தியன் பிரிமியர் லீக் தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டுமுதல் 11 ஆண்டுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. தங்கள் நாட்டுக்காக ஓராண்டு முழுவதும் விளையாண்டாலும் கிடைக்காத சம்பளம் இந்த 45 நாள் தொடரில் கிடைத்து விடுவதால் உலகில் உள்ள அனைத்து  கிரிக்கெட் வீரர்களும் இந்த தொடரில் விளையாட முழு ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சில வீரகள் ஒருபடி மேலேப் போய் தங்கள் நாட்டு அணிக்காக விளையாடாமல் கூட ஐபிஎல் தொடரில் ஆர்வமாக விளையாடிய சம்பவங்களும் நடைபெற்று உள்ளன. இதையடுத்து அடுத்த ஆண்டு மார்ச் 23 –ந்தேதி தொடங்கி மே மாதம் வரை ஐபிஎல் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இந்தியாவில் அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல்கள் நடைபெற இருப்பதால் பாதுகாப்புக் காரணங்களுக்காக ஐபிஎல் போட்டிகள் வெளிநாட்டில் நடைபெற இருக்கிறது. இன்னும் நடைபெறும் நாடு குறித்த விவரம் வெளியாகவில்லை.

இந்நிலையில் அடுத்த ஆண்டு மே மாதம் உலகக்கோப்பைப் போட்டிகளும் நடைபெற இருப்பதால் தொடர்ந்து 45  நாட்கள் ஐபிஎல் போட்டிகளில் விளையாடிவிட்டு அடுத்தது உடனடியாக  உலகக்கோப்பையில் பங்கேற்றால் வீரர்களால் முழு திறனையும் வெளிப்படுத்த இயலாது என சில நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் நினைக்கின்றன. அதனால் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து வீரர்கள் ஐபிஎல் தொடர் முழுவதும் விளையாடுவது சந்தேகத்திற்கிடமாகியுள்ளது. ஆனால் நியூசிலாந்து போன்ற சில நாட்டு வாரியங்கள் தங்கள் வீரர்கள் தொடர் முழுவதும் விளையாட அனுமதி அளித்துள்ளனர்.
webdunia

இந்திய வீரர்களுக்கு வேறு வழி இல்லாத காரணத்தால் அவர்கள் ஐபிஎல் தொடர் முழுவதும் விளையாண்டே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இம்முறை உலகக்கோப்பை மற்றும் ஐபிஎல் என இரு தொடர்களுமே வெளிநாடுகளில் நடைபெற இருப்பதால் இந்திய கிட்டத்தட்ட 3 மாதங்கள் தங்கள் உடல் நிலையை முழு தகுதியுடன் வைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளனர். அதற்காகவே தற்போது சீனியர் வீரர்களான கோஹ்லி, தோனி, பூம்ராஹ் போன்றோருக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் சுழற்சி முறையில் ஓய்வளித்து வருவதாக செய்திகள் வருகின்றன.

எது எப்படியோ ஐபிஎல் போட்டிகளால் இந்திய அணி உலகக்கோப்பையை இழக்காமல் இருந்தால் சரி என்கின்றனர் கிரிக்கெட் வெறியர்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கேப்டன்சியில் தோனி, கோலியை மிஞ்சிய ரோகித்!